Thursday, February 24, 2011

என்னவளும் விண்ணவள் தான்,
அகவையில் சின்னவள் தான்,
தேய்ந்தாலும், வளர்ந்தாலும்,
என் மனை சார்ந்தாலும்,
கடல் கடந்து இருந்தாலும்,
கங்கை நதி மறவாதவள்,
கடலும் அவளை தழுவும்,
முத்தும் அவள் முன் கரையும்,
பகலினில் காதலன் மனதில்,
இரவினில் காதலர் நிலவாவாள்,
விண்ணை தாண்டுமா நிலா ?
தரையில் இறங்கி நடக்குமா ?
தாண்டும்..நடக்கும்...
கொண்டவன் அழைத்தால் !

Sunday, February 20, 2011

Every Girl is like a Stack of Books in the Book Shelf.
You pick one for the Cover Page or Look ,
You pick because you just took,
You pick one for the Content,
You pick another for the age old scent,
...You pick another by the Bind,
You pick some for their kind,
Every book has its own shelf life,
The choice is yours to pick...
for a friend, a love or your wife !

Thursday, February 17, 2011

கட்டிலில் புரண்டு, கவிதையில் துவண்டு,
காதலியை காண கடலோரம் சென்றான்,
மென் மாலை நேர தென்றலில் நடந்தான்,
தொலைந்த சுவடுகள், அத்தனை இருக்க,
அவள் பிம்பம் மட்டும் கண்களில் மிதக்க,
அலை கடல் அழிக்க வேண்டி, பாய்ந்து வர,
அது பின் சென்றதும், மெல்ல பார்த்தான்,
தினமும் தோய்ந்தவள், மெல்ல சிரித்தாள்,
வராமலே வந்தாள், வந்ததும் வென்றாள்,
தோற்றாலும் புன்னகை அவன் கண்ணிலா,
அதற்கும் காரணம் அந்த வெண்ணிலா !

Tuesday, February 1, 2011

வேங்கையவன் விளையாட,
வெட்கத்தோடு அவள் உறவாட,
வீர விளையாட்டும் இது அல்ல,
வேட்டையாடும் நேரமும் இது அல்ல,
கட்டிலுக்கும் வந்தது ஒரு பந்தம்,
இருவருக்கும் மட்டுமே அது சொந்தம்,
வெற்றி தோல்வி கருதாது விளையாடு,
உன் விளையாட்டுக்கு அவள் படும் பாடு,
பத்து மாதம் அவள் மட்டுமே அழகு,
உன் உணர்ச்சிகளை கட்டு படுத்த பழகு,
அந்த நேரம், அந்த ஒரு நிமிடம்,
போன உயிர் அவளுக்கு வந்ததடா,
கண் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றதடா,
பிறந்தது கண்ணன் என்றால் எட்டி உதைப்பான்,
பிறந்தது ராதை எனில் அவனே கட்டி அணைப்பான்!