Tuesday, June 29, 2010

Feelings.. expressed.

பஞ்சா இருந்த என் நெஞ்ச,
பக்குவமா கலச்சு வெச்சா,
சொக்க வெச்சா சொகுசுக்காரி,
வெளியில தான் வெக்க பட்டா,

துப்பாக்கி இல்லாம நெஞ்சுல
பதிச்சா, காதல்ங்கற தோட்டா,
நெருஞ்சி முள்ளு போல பதிச்சாலும்,
நெஞ்சுகுள்ள கொஞ்சம் வலிச்சாலும்,

அட ! நம்மாளு தானே ன்னு
விட்டுட்டேன், அடியேன் நான்,
செல்லமா சில நேரம் காத கடிச்சா,
மெல்ல மெல்ல நோகாம சாகடிச்சா,

ரெண்டு மனசு மட்டும் ஒத்து போச்சு
மூளை இப்போ சுத்தமா நின்னு போச்சு,
காத்து இருந்தாலும் கால் வலிக்கல,
நேரம் ஆனாலும் மனசு சலிக்கல,

விநாடி முள்ளு நின்னு போச்சு,
புது செருப்பு நடந்து தேஞ்சு போச்சு,
கடிகாரம் ஓட மறுத்து திட்டிச்சு,
டேய், எத்தன முறை தான் என்ன

பாத்து கிட்டு இருப்பன்னு விக்கிச்சு
அவளுக்கு என்ன ஆச்சோன்னு பதரிச்சு
பத்து மணிக்கு வரேன்னு சொன்னா,
மணி பன்னெண்டு இப்போ, கண்ணா,

மணி இப்போ... ரெண்டு நாப்பது,
இன்னுமா இங்க நிக்குற ன்னு
நாய் கூட சிரிக்குது, என்ன பாத்து,
அட என்னடா இது, சரியான கூத்து !

நாள் முழுக்க சோறு எறங்கல,
படிச்சதும் மனசுல சுத்தமா ஏறல,
போன்.. நாள் முழுக்க அவ எடுக்கல,
நேத்து போனவள, நான் தடுக்கல,

மூணு நாளா சோறு தண்ணி இல்ல,
அட, உனக்கு என்ன தான் ஆச்சு புள்ள?
உனக்காக தானேடி இந்த உசுரு,
மத்ததேல்லாம் எனக்கு கொசுறு...

ஒரு வாரம் கழிச்சு, போன் அடிச்சுது,
மனசு பறக்க பறக்க, ஆசை கொதிச்சுது,
வேகமா ஓடி பொய், கதவுல இடிச்சு,
ரத்தம் சொட்ட, மெல்ல கால பிடிச்சு,

என்னடா கண்ணு ஆச்சு ன்னு கேட்டா,
ரொம்பவும் அழுதா, ஒப்பாரி பாட்டா,
மொத்தமா பத்து நிமிஷம் அழுது முடிச்சு,
மெல்ல மெல்ல அவளோட மூச்ச புடிச்சு,

ரொம்ப மெல்லமா, செல்லமா சொன்னா,
அவளோட நாய் செத்து போச்சுதாம் !
ஆசையாய், பொத்தி பொத்தி வளத்தாதாம்,
ஆறுதல் சொல்லி, செல்லமா பேசினேன்

ஸ்ஸ்ஸ்... அட என்ன கால்ல ஒரே எரிச்சல் ?
குணிஞ்சு பாத்தா அடி பட்டா எடத்துல,
அம்மா மருந்து போட்ட தால, நமச்சல்,
கட் பண்ணினேன்... செல் போன மட்டும் இல்ல ...

No comments:

Post a Comment